Monday, December 28, 2009

எது பலவீனம் எது பலம்


நான் கருணையுடன் நடந்துகொண்டால் மற்றவர்கள் அதை நன்றி இல்லாமல் பலவீனமாகத்தான் பார்க்கின்றார்கள்?
நீங்கள் பெரும்தன்மையானவர் என்ற நினைப்பு எப்போது வருகின்றது? அடுத்தவரை பிச்சக்காரன் என குறைத்து மதிப்பிடும்போதுதானே ?
ஒருவரிடம் கருணையாக நடந்து கொண்டதாக சொல்லும்போதே. உங்களுக்குள்
கூருரத்தனம் இருந்தும் அதை
பிரஜோகிக்கவில்லை என்ற அகங்காரம்தானேதொனிக்கிறது?
ஒருவரை மன்னித்து விட்டேன் என்று மார்தட்டும்போதே அவரைகுற்றவாளியாகப் பார்த்திருகிறீர்கள் என்று தானே அர்த்தம் ? ஒருவர் உங்களிடம்நன்றியுடன் நடந்து கொள்ளவேண்டும் என்ற எதிர்பாப்பு அவரை நீங்கள்பயன்படுத்தி கொள்ளவேண்டும் என நினைக்கும் கேவலமான விருப்பம்அல்லவா ?
உங்களிடம் உள்ள மிருகத்துக்கு அவ்வப்போது கருணை , மன்னிப்பு , நன்றி என்றஉடைகளை அணிவித்து வெளியே காட்சிக்கு வைக்கிறீர்கள்.
சக மனிதனை விட உங்களை உயத்தி பாக்கும் தன்மை ஒரு போதும் வளர்ச்சியைகொண்டு வராது.
நன்றி சத்துரு.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home