
பால் நிலை என்பதில் பால் என்பது ஒரு உயிர்ப் பொருள் உயிரியல் ரீதியான கட்டமைப்பு மனித இனத்தில் உடல் ரீதியான வேறு பாட்டை குறித்து காட்டுவதாகும். இதில் இனம் , மதம் , சாதி வேறுபாடு தெரிவதில்லை.
பாலைத் தவிர மனித இனத்தில் வெளிப்படையாக தெரியும் வேறுபாடு கருப்பு , பழுப்பு நிற வேறுபாடே, எனவே ஆண், பெண் இருபாலருக்கும் இடையில் ஒற்றுமை., வேற்றுமையில் காணப்படும் சமத்துவ இன்மையே பால் நிலை சமத்துவமின்மை என சொல்லப்படுகின்றது.
பால் நிலை சமத்துவமின்மை பிரச்சனையே தற்பொழுது நாட்டில் அதிகரித்து கொண்டிருக்கிற பிரச்சனையாகும் இதனையே நாம் வன்முறை என்கிறோம். இந்த வகையில் எமது பிரதேசங்களை எடுத்து கொண்டால் அதிகமாகக் வீட்டு வன்முறையே காணப்படுகின்றது.வீட்டு வன்முறை என்பது ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவர்ரால் மற்றவருக்கு ஏற்படும் துன்புறுத்தல், அச்சுறுத்தல், என்பதனையே வீட்டு வன்முறை என்கிறோம். இது வாத்தையாலோ, அல்லது செயல்லால் செயியப்படும். இதன் விளைவு உடல் ரீதியாகவோ, உளரீதியாகவோ பாதிப்பு ஏற்படலாம். அதிகமான பிரச்சனைகள் கிராமப் புறங்களில் உள்ள குடும்பங்களில் மது பாவனை , , அபின் போன்றவைகள் மூலம் வன்முறைகள் ஏற்படுகின்றன.
கிராமப் புறங்களில் வசிக்கும் குடும்பங்களில் இவ்வார்றான நிகழ்வு நடக்கும் போது கணவனில் தங்கி வாழும் மனைவிமார் அனைவரும் அதிகமான பொருளாதார பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றனர். இவ்வாறான சந்தப்பத்தில் பெண்கள் எதாவது சுய தொழில் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சில ஆண்கள் கௌரவ பிரச்சனையாக இதனை ஏற்றுகொள்ள மாட்டார்கள்.மீண்டும் தொடரும்.................Labels: பால் நிலை பாகுபாடுகள்