Monday, December 28, 2009

எது பலவீனம் எது பலம்


நான் கருணையுடன் நடந்துகொண்டால் மற்றவர்கள் அதை நன்றி இல்லாமல் பலவீனமாகத்தான் பார்க்கின்றார்கள்?
நீங்கள் பெரும்தன்மையானவர் என்ற நினைப்பு எப்போது வருகின்றது? அடுத்தவரை பிச்சக்காரன் என குறைத்து மதிப்பிடும்போதுதானே ?
ஒருவரிடம் கருணையாக நடந்து கொண்டதாக சொல்லும்போதே. உங்களுக்குள்
கூருரத்தனம் இருந்தும் அதை
பிரஜோகிக்கவில்லை என்ற அகங்காரம்தானேதொனிக்கிறது?
ஒருவரை மன்னித்து விட்டேன் என்று மார்தட்டும்போதே அவரைகுற்றவாளியாகப் பார்த்திருகிறீர்கள் என்று தானே அர்த்தம் ? ஒருவர் உங்களிடம்நன்றியுடன் நடந்து கொள்ளவேண்டும் என்ற எதிர்பாப்பு அவரை நீங்கள்பயன்படுத்தி கொள்ளவேண்டும் என நினைக்கும் கேவலமான விருப்பம்அல்லவா ?
உங்களிடம் உள்ள மிருகத்துக்கு அவ்வப்போது கருணை , மன்னிப்பு , நன்றி என்றஉடைகளை அணிவித்து வெளியே காட்சிக்கு வைக்கிறீர்கள்.
சக மனிதனை விட உங்களை உயத்தி பாக்கும் தன்மை ஒரு போதும் வளர்ச்சியைகொண்டு வராது.
நன்றி சத்துரு.

Labels:

Sunday, December 27, 2009

மனக் குரங்கு

கடலில் பிறந்து கடலில் மடியும் கடலலைகள் போன்று மனதில் பிறந்து செயலில் முடிந்துவிடும் மனவலைகளும் அத்துடன் முடிந்துவிடுவதில்லை மீண்டும் பிறந்துகொன்டுதான் இருக்கின்றன.

Labels:

இயற்கை கவிஞன் கண்ணதாசன்

கவி அரசு கண்ணதாசன் ஓர் அற்புத இயற்கை கவிஞன் ...
கண்ணதாசனின் இடத்தை எந்த கவியாலும் நிரப்ப முடியாது யாரும் இனி பிறக்கவும் முடியாது வாழ்க்கையை அனுபவமாக தந்த இயற்கை கவி அரசு.
ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எப்படி வாழவேணும் அல்லது வாழக்கூடாது என்பதை இப் பாடலில் மிக அழகா சொல்லுகின்றார் .

பரமசிவன்
கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா ? பாம்பு இனத்தை அழித்து
விட்டு கருடன் சிவபெருமான்னிடம் சென்றார் மமதையுடன். அப்போது சிவபெருமான்
கழுத்தில் இருந்த பாம்பு கேட்டதாம், கருடா எப்படி சௌக்கியமா ?
கருடன்னால்
பாம்பை கொல்ல முடிமா? சிவபெருமான் கழுத்தில் உள்ளதே.
கருடன் சொன்னான்
யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்கியமே.....
உயந்த
இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி
வந்தால் உன் நிழல் கூட உன்னை மிதிக்கும்..... உன்னிடம் பணம், பதவி, பொருள்
இருந்தால் உன் அருகில் எல்லோரும் இருப்பார்கள். இல்லாவிட்டால்.......
நன்றி கெட்ட மனிதனே.....


ஆணும், பெண்ணும் சேந்ததுதான்
வாழ்க்கை.... வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு வேண்டும் ஒன்று சிறியது என்றால்
எந்த வண்டி ஓடும் ...... ஆணும் , பெண்ணும் சமத்துவம் மாணவர்கள் என்பதை மிக
அழகாக சொல்லுகின்றார்.......(Gender Equality)

எனவே
எம் வாழ்க்கையை சரியாக திட்ட மிடா விட்டால், எம்மை தொலைத்து
விடுவோம்....... கவனம் dear friends இன்று என் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட
பாடம்...


Labels: ,

Saturday, December 26, 2009

தொலைக்கப்பட்ட உறவு


அம்மா உன்னை நான் தொலைத்து விட்டேன் என் வாழ்க்கையென்னும் பிருந்தாவனத்தில் நாயைக் கண்டபோது கல்லு இல்லை ,கல்லைக் கண்டபோது
நாயைக் காண வில்லை .
இன்று என் இளமை என்னும் பிரிந்தவனம் இரவும் பகலும் சருகளாக உதிர்கின்றன உன்னை நினைத்து .
துன்பங்களையும், துயரங்களையும் தாங்கிய உன் இதயம் அதற்க்கு பழக்கப்பட்ட உன் இதயம், சுகம் உன்னை தேடி வர இருந்த போது அதை ஏற்க மறுத்து நிறுத்தி கொண்டதா?
மீண்டும் விரியும் இந்த குமுறல்

மட்டக்களப்பில் சுனாமியும், பால்நிலையும்இன்று சுனாமிக்கு நினைவு நாள் அதிகமான பெண்களினதும், குழந்தைகளினதும் வாழ்வு தொலைந்த நாள், யுத்தம் தொலைத்த மிகுதியை தொலைத்த நாள் .
பால் நிலை சமுதாய அமைபப்பை மீண்டும் நினைவுட்டிய நாள்.
ஆண்கள் எல்லாம் தேவையேன் நிமித்தம் வெளியில் செல்ல பெண்கள் வீட்டில் இருந்தார்கள்.
சமையல் அறையிலும் , மலசல கூடத்திலும் இருந்தார்கள்.
பெண்களின் அணித்திருந்த ஆடைகள் மற்றும் உயரத்தில் ஏறமுடியமை , பெண்களின் நீண்ட கூந்தல்கள் மற்றும் பிள்ளைகளை தேடி சென்றமை மற்றும் கடல் அலையால் கிழிந்த ஆடைகள் போன்ற பால் நிலை பாத்திரங்களினாலும் உறவுகளாலும் கொல்லப் பட்டனர்.

Friday, December 25, 2009

முதல் பதிவு

மௌனக்குயிலின் இராகம் எல்லாம் மௌனமாக போகுயின்றன, நிலை மாறும் உலகில் நிலையானவைதன் என்ன
சோதனை கூடு கட்ட வேதனை குடியிருக்க துன்பங்கள் முட்டையிடுகின்றன மற்றும் கவலைகளும் குஞ்சு பொறிக்கின்றன
நினைத்தவைகள் வாழ்க்கையில் நடக்க வில்லை இனி நடப்பதைத்தான் நினைக்க வேண்டும் .
சோகத்தை எழுதினாலும் சுகமாகத்தான் உள்ளது எழுதுவது என் வாழ்க்கையல்லவா இனி விரியும் என் வாழ்க்கை .

Labels: ,