Friday, January 8, 2010

Voilence Against Women பெண்களுக்கு எதிரான வன்முறைகள்.மீண்டும் வன்முறை தொடர்பான உண்மை சம்பவங்களை உங்களுடன் பகிந்து கொள்கின்றேன்.
வன்முறை தொடர்பாக உருவாயிருக்கும் கோட்பாடுகள் மற்றும் எண்ணக்கருக்களின் பிரகாரம் பின்வரும் பிரிவுகளுடாக விபரிக்கலாம்.

" ஆள்ளோருவரை அவமதித்தல், அச்சுறுத்தல், வேதனைப்படுத்தல், அல்லது அழித்தல் என்பதை வன்முறை அல்லது துன்புறுத்தல் என வரைவிலக்கணப் படுத்தமுடியும். ஒரு நபர் இன்னொரு நபரை அடிமைப்படுத்த மேற்கொள்ளும் முயற்சியாகவும் பெரும்பாலும் உடல் ரீதியான , பாலியல் ரீதியான , உளரீதியான துன்புறுத்தலை ஒருவர் பாதிப்புக்கு உள்ளாவதை வன்முறை என இடுத்து காட்டமுடியும். இதன் மூலம் பெண்ணின் மனித உரிமைகள் மிறப்படுவதும் நிகழ்கின்றது. மீண்டும் ஒரு அவலை பெண்ணின் சோக கதை உங்கள் முன் விரிகின்றது.


பெயர் : துரையப்பா வேதநாயகி வயது : 46

குடும்பத்தைப்
பற்றி……..


என்னுடைய பெயர் துரையப்பா வேதநாயகி. ஏங்கள் குடும்பத்தில் அம்மா உட்பட, 6 பெண் சகோதரங்களும், ஒரு ஆண் சகோதரமும். நான் குடும்பத்தில் மூத்த பிள்ளை. கணவர் இறந்த பின் கோழி வளர்ப்பு, கடதாசிப் பை ஒட்டிக் கொடுத்தல் போன்ற கைத்தொழில்களைச் செய்து என் வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றேன். எனக்கு இன்றும் சமைக்கத் தெரியாது. என் அம்மாதான் எனக்கு எல்லாமே.

உங்கள் வருமானம் தொடர்பாக.....

திருமணமாகி 6 வருடத்தில் யாழ்ப்பாணத்திற்குத் தொழிலுக்குச் சென்ற என் கணவர் யூலைக் கலவரத்தில் இறந்தார். எனக்குக் குழந்தைகளும் இல்லை. கணவர் இறந்தாலும் அம்மா கூடவே இருந்து என்னைக் கவனித்தார். தம்பி மரக்கடை வைத்திருக்கிறார். டுயனெ அயளவநச இயந்திரமும் வைத்திருக்கிறார். அவரும் என்னைப் பராமரிக்கிறார். இதைவிட சுவட் நிறுவனத்தில் நான் பல தடவை கடன் பெற்றிருக்கிறேன். என் ஆளுமை ரீதியாகவும் வளர்ச்சியடைந்திருக்கி;ன்றேன்.

நீங்கள்
மறு திருமணம் செய்ய விரும்பவில்லையா?

நான் என் கணவருடன் 6 வருடம் வாழ்ந்திருக்கின்றேன். அந்த வாழ்க்கை எனக்குப் போதும். அப்பாவுக்கு மறுமணம் செய்து தர விருப்பம். ஆனால் எனக்கு விருப்பமில்லை. அம்மா என்னுடன் இருப்பதால் எனக்கு மனதுக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது.

ஆளுமை
ரீதியாக நீங்கள் வளர்ச்சியடைந்த விதம் பற்றிக் குறிப்பிட முடியுமா?

தொழில் சார் பயிற்சிகள் அதிகம் பெற்றிருக்கிறேன்.
கிராமக் கிளையில் 24 அங்கத்தவர்களுக்கு நான் தலைவியாக இருக்கின்றேன். கூட்டங்களில் ஏனைய பெண்களின் தேவைகள் பற்றித் துணிந்து பேசக்கூடிய நிலையில் நான் இருக்கிறேன்.

தற்போது நீங்கள் எதிர்நோக்கும் பிரச்சனை என்ன?

2004இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் சொந்த இடத்திலிருந்து இடம் பெயர்ந்து, மண்டானை முகாமில் இருந்தோம். முகாமிலும் நான் பலருக்கு வழிகாட்டியாக இருந்தேன். பல பெண்கள் என் புத்திமதியைக் கேட்டு நடந்தார்கள். தொடர்ந்தும் மண்டானை முகாமில் வசிக்கமுடியாத காரணத்தால் 4 மாதங்களின் பின் சொந்த இடததிற்குத் திரும்பினோம். அங்கு பார்வையிட வந்த கிராம சேவகரும், அவர் குழுவும் என் வீட்டுக்கு அருகிலுள்ள வீடுகளுக்கு முழுச்சேதமும், என் வீட்டுக்கு மாத்திரம் பகுதிச் சேதமும் பதிந்துவிட்டுச் சென்றார்கள். முன் வீடு, பின் வீடு எல்லாருக்கும் முழச் சேதமே பதியப்பட்டது. இது தொடர்பாக நான் கேட்டபோது. தனி ஆள் என்று தான் பகுதிச் சேதம் தரப்பட்டதாகவும், நிறுவனங்கள் உதவி வரும்போது உதவிகள் பெற்றுத் தருவதாகவும் அவர்கள் கூறினர்.
கடலிலிருந்து 235 மீற்றருக்குள் என்னுடைய வீடு உள்ளது. ஆனால் 1000 மீற்றருக்கு அப்பால் உள்ள வீட்டுக்கும் அந்தப்பகுதி கிராமசேவையாளர் முழுச் சேதம் வழங்கியுள்ளார். எங்களுடைய ஊருக்குள் 74 குடும்பத்திற்கு பகுதிச்சேதம் வழங்கப்பட்டது.

இது
தொடர்பாக நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா?


SWIDO VISION நிறுவனத்தால் நடாத்தப்பட்ட கூட்டத்தின் பின்னர் பகுதிச் சேதம் வழங்கப்பட்ட 74 குடும்பப் பெண்களும் சேர்ந்து அரசாங்க அதிபர் காரியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தோம். என் தலைமையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசாங்க அதிபர் பொலீஸ் உத்தியோகத்தர்களுடன் வந்து எங்களைத் தடுத்தார். நாங்களோ தீர்வு கிடைக்கும் வரை கைவிட மாட்டோம் எனக் கூற, இது தொடர்பாகக் கடிதம் எழுதித் தருமாறும், தாங்கள் முடிவெடுத்துத் தருவதாகவும் பொலிசார் தொவித்தனர். 74 பெண்களும் சேர்ந்து பொலிசார் ஊடாகக் கிராமசேவையாளருக்குக் கடிதம் எழுதிக் கொடுத்தோம். ஓரு வாரத்தின் பின் பொலிசில் இது தொடர்பாகக் கேட்க, அதற்குப் பொறுப்பான உத்தியோகத்தர் இல்லை என்று கூறினர். மீண்டும் எல்லோரும் சேர்ந்து ஜனாதிபதி செயலகத்திற்கு இது தொடர்பான ஒரு கடிதம் அனுப்பியுள்ளோம். 2 தடவைகள் அனுப்பியுள்ளோம். எந்தப் பதிலுமில்லை. கிராமசேவையாளரிடம் இது தொடர்பாகக் கேட்டால், பிரதேச செயலாளரிடம் கேட்கும்படி சொல்கிறார். புpரதேச செயலாளரிடம் கேட்டால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்துள்ளது. இது தொடர்பாக அரசாங்க அதிபருக்கு அறிவித்தல் கொடுத்துள்ளதாகவும், அங்கிருந்து பதில் வந்த பின் அறிவிப்பதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

நிறுவனங்களிடம்
நீங்கள் உதவி நாடிச் செல்லவில்லையா?


CARE நிறுவனத்திடம் போய் உதவிகள் கேட்டோம். பகுதிச் சேதம் பதியப்பட்டவர்களுக்கு நாங்கள் எந்த உதவியும் செய்யமாட்டோம் எனக் கூறினார்கள். ளுறனைழ எளைழைn நிறுவனத்தில் நான் அங்கத்தவர் இல்லை. இலவசத் திட்டம் மற்றும் வாழ்வாதாரத் திட்டத்திற்கு உதவி கேட்டு 6,7 கூட்டங்களுக்குச் சமூகமளித்திருக்கின்றேன். ஆனாலும் தனித்திருக்கும் ஒரு பெண்ணுக்கு உதவிசெய்ய முடியாது என்றும், குடும்பத்துடன் இருப்பவர்களுக்கு மாத்திரமே உதவி செய்ய முடியும் என அவர்களும் தெரிவித்தனர். நிறுவுனத்தினர் நாங்கள் இருந்த கொட்டிலுக்கு வந்து கூட்டம் நடத்தினார்கள். மனித ஆணைக்குழு உறுப்பினர்கள் கூட வந்திருந்தார்கள். நான்தான் அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினேன். அவர்களும் எங்களுடைய பிரச்சனையைக் கேட்டார்கள். கல்முனையில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்குச் சென்று முறைப்பாடு செய்யுமாறு கூறினார்கள். அவ்வாறே நாங்களும் எங்கள் பிரச்சனை தொடர்பாகக் கடிதம் அனுப்பியுள்ளோம்.

மீண்டும்
மீண்டும் உரிமைக்காகப் போராடவில்லையா?

கிராம சேவையாளர் மற்றும் அரசாங்க அதிபரிடம் சென்று கதைத்து அலுத்துவிட்டது. மூன்றாவது கடிதமும் ஜனாதிபதிச் செயலகத்திற்கு அனுப்பிவிட்டோம். இந்தக் கடிதத்திற்காவது பதில் வரும் என்று நம்புகின்றேன்.வீட்டு
உரிமை மறுக்கப்பட்டமை தொடர்பாக உங்கள் மனநிலை எவ்வாறு இருக்கின்றது?


உள
ரீதியாக நான் மிகவும் பாதிப்படைந்திருக்கின்றேன். 23 வயதில் கணவனின் இழப்பு என்னை மிகவும் பாதித்தது. தற்போது தனியாள் தானே! ஏன எல்லாரும் என்னைத் தட்டிக் கழிப்பது மிகவும் வேதனையாக உள்ளது. எந்தப் பெண்ணுக்கம் இந்த நிலை வரக்கூடாது.
இச்சம்பவம் என்னைப் பாதித்ததாக நான் நினைக்;கவில்லை. நான் எனது உரிமைகளுக்காகக் கதைக்கவுமில்லை. தொழிற் செய்யக்கூடியவர்களுக்கு உதவிகள் வழங்கலாம் அத்துடன், என் நிலையிலுள்ள மற்ற பெண்களுக்கு உதவி கிடைக்க வேண்டும் என்பதே எனது ஆதங்கம்.

முழுச்சேதம்
பதியப்படாமை தொடர்பாக உங்கள் கருத்து :


கிராம
சேவையாளர் ஆள் பார்த்து நடந்துகொண்டார்.
லஞ்சம் தொடர்பான ஊழல் நடைபெற்றது என்பது பலருடைய கருத்து. கிராமசேவையாளர் நேர்மையாக நடக்கவில்லை என்பது பலர் கருத்து.

யுத்தம், சுனாமி போன்ற அனத்தங்கள் பெண்களை அவர்களின் பால் நிலை பாத்திரங்களால் அதிகம் பாதிக்கின்றன. அனத்தங்களின் பின்னர் மீள் கட்டுமான பணிகளிலும், வாழ்வாதார திட்டக்களிலும் பெண்களின் உரிமைகள் தொடர்பான தெளிவான கொள்கைகள் இல்லை என்பது உண்மையாகும்.
இப்படியான உண்மைக்கதைகள் தொடரும், உங்கள் கருத்துக்களை எதிர்பாக்கின்றேன்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home