Tuesday, January 5, 2010

Gender Discrimination and Violence Against Women பால் நிலை பாகுபாடும் பெண்களுக்கு எதிரான வன்முறையும்


பால் நிலை பாகுபட்டினால் பெண்களுக்கு எதிரான வன்முறையானது வீட்டுக்கு வீடு வாசபடிபோல் அதிகரித்து காணப்படுகினது. அண்மைக் காலமாக சமுதாயத்தில் வன்முறைகள் தொடர்பாகக் கவனம் தேசியரீதியிலும் மற்றும் சர்வதேசரீதியகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சமுதாயத்தில் பரவிச்செல்லும் வன்முறையானது சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் தற்போது இலங்கை சமுதாய சுழலில்
அரசியல், பொருளாதார, கலாச்சார காரணங்களின் மீது வன்முறைகள் விரிவடைந்தன. ஆகவே , வன்முறையை சரியாக இனம் காண்பதும் அவற்றின் காரணங்களை பகுத்தரிந்தும் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் சமுக அபிவிருத்தியில் ஈடுபட்டுள்ள அனைவரது கடமையாகும்.
நான் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக இலங்கையின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் ஒரு ஆயிவுணை மேற்கொண்டிருந்தேன்.
யுத்தமும் ,வன்முறையும், மற்றும் வறுமையும் பல பெண்களின் வாழ்வை சின்னபின்னாம ஆக்கியுள்ளன. இப்படி தொலைத்துவிட்டு வாடி வதங்கி நிற்கும் ஆயிர கணக்கான பெண்களில் சில பெண்களின் உண்மை சம்பவங்களை உங்களுடன் பகிந்து கொள்கின்றேன். இதன் நோக்கம் பெண்களின் நிலையை வெளியில் கொண்டு வருவதும், சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வை கொண்டுவருவதும்மாகும்.

பெயர் : பரராஜசிங்கம் மங்களேஸ்வரி
வயது : 36

உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள் :

ஏனது பெயர் பரராஜசிங்கம் மங்களேஸ்வரி. ஏனக்கு வயது 36. எனது சொந்த இடம் தம்பிலுவில். தற்போது என் குடும்பத்தில் அப்பா, அம்மா, 2 ஆண் ககோதரங்கள், ஒரு பெண் சகோதரம் உட்பட 6 அங்கத்தவர்களைக் கெண்ட அழகிய குடும்பம். தற்போது நான் என் 3 பிள்ளைகளுடனும், அம்மாவுடன் வசித்துவருகின்றேன்.


நீங்கள் திருமணம் செய்யவில்லையா?

1989ம் ஆண்டில் எனக்குத் திருமணம் நடைபெற்றது. அம்மா, அப்பா பார்த்த ஆணையே நான் திருமணம் செய்துகொண்டேன். ஏன் கணவர் பெயர் சற்குணம். அக்கரைப்பற்று 8ம் குறிச்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கடை ஒன்றில் கூலித் தொழில் செய்யும் என் கணவருக்கு, அம்மா அப்பா இல்லை. 2 அண்ணா, 2 அக்கா வசதியாக அக்கரைப்பற்றில் வாழ்கிறார்கள். 2 அண்ணாவும் இஸ்லாம் மதப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு மிகவும் சிறப்பாக வாழ்கின்றார்கள்.

உங்கள் திருமண வாழ்க்கை திருப்திகரமாக அமைந்ததா?

திருமணம் முடித்து 15 நாட்களால் என் கணவர் என்னிடம், தான் ஒரு முஸ்லிம் பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததாகச் சொன்னார். என் கணவருக்கு என் தாய் தந்தை இரண்டரை ஏக்கர் பூமி கொடுத்திருந்தனர். திருமணத்தின் பின் என் கணவர் அதனை விற்று, கொச்சிக்காய் மில், நெல் மில் நடத்தினார். திருமணம் முடித்த நாள் முதல் என் கணவர் என்னை மதம் மாறச் சொல்லித் துன்புறுத்தத் தொடங்கினார். தன்னுடைய அண்ணா இருவரும் போல தானும் வசதியாக வாழ வேண்டுமானால், நான் இஸ்லாத்தைத் தழுவ வேண்டும் எனக் கூறினார். நான் முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறினேன்.

திருமணத்திற்குப் பின் 10 நாட்கள் மட்டுமே நான் என் அம்மாவுடன் தம்பிலுவில் இல் இருந்தேன். அதன் பின் என் கணவருடனேயே அக்கரைப்பற்றில் வசித்துவந்தேன். 1990இல் மூத்த ஆண் குழந்தை பிறந்து 3 மாதங்களால் இறந்தது. அதன் பின் 1990 இனக் கலவரத்தினால் மீண்டும் தம்பிலுவில்லுக்கு வந்து வசித்தோம். எனக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உண்டு. மூத்த பெண் தரம் 11 படிக்கிறாள். இரண்டாவது மகன் 6ம் ஆண்டு படிக்கிறான். மூன்றாவது பெண் பிள்ளைக்கு 4 வயது.


உங்கள் குடும்பத்தில் பிரிவு ஏற்படக் காரணம் என்ன?

தம்பிலுவில்லுக்கு வந்தவுடன் என் வளவைத் தன் பெயருக்கு எழுதித் தரும்படி கேட்டார். நான் முடியாது என்று சொல்ல சாகப்போவதாகச் சொன்னார். கோபத்தில் என்னை அடித்தார். பிள்ளைகளையும் துன்புறுத்தினார்.
என் கணவருக்கு என்னில் சந்தேகம். நான் சாக வேண்டும் என்று செய்வினை செய்து, வீட்டுப்பொருட்கள், நகை எல்லாம் விற்று, என்னைப் படுக்கையில் போட்டுவிட்டு வேலைக்குப் போய்வந்துகொண்டிருந்தார்.
என் கணவருக்கு என் மூத்த மகள் (தரம் 11 ) பாடசாலை செல்வதோ படிப்பதோ கொஞ்சமும் விருப்பம் இல்லை. அவர் வேலை விட்டு வந்தால், என் மூத்த மகள் வேறு வேலை எதுவும் செய்யக்கூடாது. என் கணவருக்கு அருகிலேயே இருக்க வேண்டும். பல மணி நேரம் பேசிக்கொண்டிருக்க வேண்டும். நான் அருகில் போகக்கூடாது. அவருடைய கடமைகளை எல்லாம் தன் மூத்த மகள் நிறைவேற்ற வேண்டும் என்றே நினைப்பார். என் மகளுக்குச் சங்கீத பாடம் மிகவும் விருப்பத்திற்குரிய பாடம். நன்றாகப் பாடுவாள். ஆனால் என் கணவருக்கோ அவள் பாடக்கூடாது. எந்தநேரமும் அவருக்கு என் மூத்த மகள் வேண்டும்.
அவளுடைய படிப்பு சம்பந்தமாக நான் ஏதாவது கதைத்தால், அடியும், கொடுமையும்தான். ஒரு சமயம் தலையணையை என் முகத்தில் வைத்து அழுத்தி என்னைக் கொலை செய்ய முயற்சித்தார். மில்லை விற்றுக் காசை எடுத்து வீணாக்கினார். பிள்ளைகளுக்குப் புத்தகம், கொப்பி வாங்கிக் கொடுக்கமாட்டார். துணிமணி வாங்கிக் கொடுக்க மாட்டார். என்னுடைய சகோதரங்கள் தான் என் பிள்ளைகளின் படிப்புக்கு உதவி செய்வார்கள். பிள்ளைகள் படித்துக்கொண்டிருப்தைக் கண்டாலும் அடிப்பார். ஊருக்கு நல்ல மனிதன். ஆனால் ஊர் முழுக்க கடன்.
என் கணவரின் தொல்லை தாங்க முடியாததால், 2006இல் என் கணவரை வீட்டைவிட்டுப் போகும்படி நான் பிரச்சனை எடுத்தேன். அதற்காக என்னை அடித்தார், புத்தகம், கொப்பி, துணிமணிகள் எல்லாம் போட்டு வீட்டுக்குள் எரித்தார். நான் வீட்டை விட்டுப்போக ஆயத்தமாக, தான் வீட்டை விட்டுப் போனார்.

உங்கள் வருமானம், வாழ்க்கைச் செலவு எவ்வாறு செல்கிறது?

என்னுடைய இரு ஆண் சகோதரங்களும் மேசன் தொழில் செய்பவர்கள். இருவரும் திருமணம் முடித்துவிட்டார்கள். என் தங்கையும் திருமணம் முடித்து வசதியாக இருக்கின்றாள். என் சகோதரங்கள் மூவருமே என்னையும், என் குழந்தைகளையும் பராமரித்து வருகின்றனர். என் கணவருடைய அண்ணா இருவரும் என் பிள்ளைகளுக்கு உடுப்பு, புத்தகம், கொப்பி வாங்கி அனுப்புவார்கள். ஆனால் அதையும் வேறுயாருக்காவது கொடுத்துவிட்டு ஓரிரண்டை மட்டும் கொண்டுவந்து பிள்ளைகளிடம் கொடுப்பார்.


உங்கள் பிரச்சனை தொடர்பாக நீங்கள் யாரிடமாவது முறையீடு செய்யவில்லையா?

ஏன் பகுதி கிராமசேவையாளர் திருத்தங்கவேல் என்னுடைய பெரியப்பா. ஆவரிடம் போய் முறையிட்டேன். ஆனால் அவர் என் கணவரின் சார்பாகவே இருந்தார். அவர் வீட்டில் இருந்துதான் எனக்குச் செய்வினை, சூனியம் செய்தார்.
என் கணவருடைய சகோதரங்களிடம் போய் பல தடவை நான் முறையிட்டிருக்கின்றேன். நாங்கள் என்னம்மா செய்ய? நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் போய் உங்கள் அம்மாவுடன் இருங்கள் என்று சொன்னார்கள்.
இயக்கத்திடம் போய் முறையிட்டேன். காசு கொடுத்து சமாளித்துவிட்டார்.

பொலீஸ் இல் முறைப்பாடு செய்து, சட்ட நடவடிக்கை எடுக்கவில்லையா?

பொலிசாரிடம் சொல்ல பயமாக இருக்கிறது. ஏற்கனவே எனக்கும், நான் வசிக்கம் வளவுக்கும் செய்வினை செய்து, நான் படுத்தபடுக்கையாக இருந்து, எவ்வளவோ காசு செலவு செய்து என்னையும், பாழடைந்த நிலையிலிருந்த என் வளவையும் என் அம்மா மீட்டு எடுத்தார். யாராலும் அவனைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. இந்த நிலையில் மீண்டும் அவனைப் பொலிசாரிடம் ஒப்படைக்க எனக்கு முடியாமல் உள்ளது. என் சகோதரங்கள் பொலீசில் போய் என் கணவர் தொடர்பாக முறைப்பாடு செய்தனர். அவர்கள் கிராமசேவகரின் கடிதத்துடன் வரும்படி சொல்லி அனுப்பினர். கிராமசேவகரோ என் கணவன் மிகவும் நல்லவன் என்றும், நானே நடத்தை சரியில்லாதவள் என்றும் சொல்லி அனுப்பியிருந்தார்.

உங்கள் வாழ்க்கை தொடர்பாக நீங்கள் என்ன முடிவுசெய்துள்ளீர்கள்?

என் கணவன் பொறுப்பில்லாதவன், அக்கறையில்லாதவன், குடும்பத்தைப் பராமரிக்கத் தெரியாதவன், மனைவி பிள்ளைகளை மதிக்கத் தெரியாதவன் மட்டுமல்ல பெண் விடயத்திலும் நல்லவன் அல்ல. குடும்பத்திற்குப் பொருத்தமான தலைவனாகவோ, பிள்ளைகளுக்கு ஏற்ற தந்தையாகவோ அவன் நடந்துகொள்ளவில்லை. எனவே என் கணவனுடன் சேர்ந்து வாழ எனக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. நானும், என் பிள்ளைகளும் நிம்மதியாக வாழ ஆசைப்படுகின்றோம்.
இப்படியான வாழ்க்கையை தொலைத்த பெண்களின் சோகக் கதைகள் தொடரும். இது கற்பனையல்ல உண்மை சம்பவங்கள் ........

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home