Saturday, February 13, 2010

Happy Valentine's Day








உறவுகளால்
தான் உலகம் வளச்சியடைகின்றது ,
மனிதன் மனிதனையும்,
மதங்கள்
மதத்தினையும் ,
சாதிகள் சாதிகளையும், இனங்கள் இனத்தினயும்,
நாடுகள் நாடுகளையும், பிராந்தியங்கள் பிராந்தியங்களையும் ,
பணக்காரன் ஏழைகளையும் காதலிக்க தொடங்கிவிட்டால் ?....
அழிவுகளும், துன்பங்களும் ,
வேதனைகளும்
காற்றாய் பறந்துவிடுமே..
சொர்க்கம் வந்துவிடுமே.... ஒ... மனிதா திரும்பிபார்...
காதல் தான் இன்ப ஊற்று ..
காதல் தான் இன்ப ஜோதி ..
காதல் தான் உலக மகா சக்தி
இஸ்ரப்பட்ட இருவர் சேர்ந்து கஸ்ரப்படுவதுதான் காதல்....
காதல் தும்மலை போன்றது.
எனவே காதலித்து பார்..............

Labels:

Friday, January 1, 2010

எதிபாப்புக்கள்





















ஒர்ரண்டின்
மறைவு இன்னோர் ஆண்டின் பிறப்பு
கடந்தாண்டின் கசப்பான நினைவுகளை மறந்து
புதியாண்டில் புதிய நம்பிக்கைகளுடன்....
புத்தாண்டை வரவேற்கின்றோம்....

நடந்த நிகழ்வுகளையே மீண்டும் தொடர செய்வதில்
காலத்திற்கு ஒரு குரூர திருப்தி....
மறுபடி துன்பம் , மரணம், பிறப்பு என்பது இயற்கையின்
நியதி அல்லவா?
கடந்த ஆண்டில் எத்தனையோ, சோதனைகள் , துன்பங்கள்
மனித அவலங்கள், தாங்க முடியாத வேதனைகள்.
துடிக்க துடிக்க உயிகளை இழந்தோர், அங்கவீனம்மானோர்,
உறவுகளை இழந்தோர், போராட்டத்தின் பெயரால் நிர்கதியான
இளைஞ்சர், யுவதிகள் சிறைமுகாங்களிலும் , விசேட தடுப்பு முகாங்களிலும்
எதிர் காலத்தை தொலைத்து விட்டு வாடி, வதைங்கி நிற்கும் கட்சிகள்.
கண் முன்னே நடந்த கொடூரத்தால் மனநோயாளிகளும், மௌனமாக போனவர்களும்.
உடைமைகளையும், வாழ்வாதாரத்தை இழந்தவர்கள்.
இன்னும் எத்தனையோ எத்தனை..........

ஒவ்வொருதாக்கத்திற்கும் சமணும் எதிருமான மறு தாக்கம் உண்டு என்பது
நீயுட்டனின் விதியாகும்.
எனவே இத்தனை தாக்கத்திற்கும் சமணும், எதிருமான தாக்கம் உண்டா?
அல்லது எமது எதிர்பப்ப்புக்கள் கானல் நீர்ராக போகுமா?
இதற்கு புதியாண்டு விடைதருமா?

Labels: