Monday, January 4, 2010

தடுமாற்றம்














காட்டில்ல் ஒரு சிங்கம் கால்களை
வீசி வீசி கர்வத்தோடு நடந்தது.
அந்தப்பக்கம்
போய்க் கொண்டிருந்த முயல் குட்டியை சட்டன்று பிடித்தது. ஏய்,
இந்த காட்டில் யார் ராஜா "? என்று கேட்டது . முயல் குட்டி குல நடுங்க "சந்தேகம் என்ன " நீங்கள் தான்" என்றது.
சிங்கம் முயலை விட்டுவிட்டு , அடுத்ததாக ஒரு நரியை தாவிப்பிடித்தது. அதே கேள்வியை கேட்டது.
நரி நடுக்கத்துடன் "தலைவா" உனக்கன்ன சந்தேகம் ? உன்னை தவிர , வேறு யார்,
இங்கே ராஜாவா இருக்க முடியும் என்றது.
பின்னர் வழியில் அகப்பட்ட மிருகங்கள் எல்லாம் பணிவாக மண்டியிட்டு சிங்கத்திடம் நீங்கள் தான் ராஜா " வேறு யார் இங்கு ராஜாவாக இருக்கமுடியும் என்று அலறின.
சிங்கத்திற்கு பெருமை பிடிபடவில்லை.
இன்னும் கொஞ்சம் துர போனது. அங்கே ஒரு யானை , சிங்கத்தை பொருப்படுத்தாமல் அதுபாட்டுக்கு மரத்தில் இலைகளை பறித்துகொன்டிருந்தது.
சிங்கம் அதன் அருகில் போய் " ஏய் முட்டாளே" யார் இந்த காட்டுக்கு ராஜா " என்று கர்ஜித்தது.
யானை திரும்பியது , தும்பிக்கையால் சிங்கத்தை தூக்கி சுருட்டி ஓங்கி தரையில் அடித்தது.
சிங்கத்தின் முதுகு எலும்பே முறிந்துபோனது. சிங்கம் யானையை பாத்து இப்ப என்னப்பா கேட்டுவிட்டேன் , வாய் வார்த்தையாக சொல்லக் கூடாதா என்று முனகிய படி கேட்டது சிங்கம்.
இனிமேல் இந்த விடயத்தில் உனக்கு குழப்பமே வரக்கூடாது பார் என்றது யானை.
நிறை கூடம் ஒரு போதும் தழும்பக் கூடாது.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home